ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.
தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நினைத்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனால் உயிர் சேதம், பொருட்சேதம் என ஏதும் ஏற்படவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை போன்ற தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.