பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ள நிலையில், மற்ற நகரங்களில் வசிப்பவர்களோ வரலாறு காணாத வகையில், மாதம் ஒன்றிற்கு 1,900 பவுண்டுகள் வாடகை செலுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
Rightmove என்னும் இணையதளம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வாடகைக்கு விடப்படும் நிலையில் இருக்கும் வீடுகளைவிட, வாடகைக்கு வீடு தேடும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் காலாண்டில், வாடகை வீடு குறித்து விசாரிக்கும் மக்களுடைய எண்ணிக்கை 173 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாடகைக்கு விடப்படும் நிலையில் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கும், வாடகைக்கு வீடு தேடும் ஆட்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் குறைவதற்கான சில அறிகுறிகள் தெரிந்தாலும், வாடகைக்கு விடப்படுவதற்காக புதிய வீடுகள் பெரிய அளவில் கட்டப்படாததால், வாடகைக்கு வீடு தேடுவோர், இன்னும் கொஞ்சம் காலத்துக்கு கடும் போட்டியை எதிர்கொள்ளவேண்டி வரும் என குறித்த இணையதள இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.