நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மாலை வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் கரையோரப்பகுதிகளில் முற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.