சுவிஸ் நகரங்களில் கழிவுநீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், சில பகுதிகளில் மறைவான கொரோனா அலை ஒன்று பரவிவருவதாக தெரிவித்துள்ளன.
கழிவுநீரில் காணப்படும் கொரோனா வைரஸின் அளவு, 2022 கோடை மற்றும் கடந்த இலையுதிர்காலத்தில் காணப்பட்டதைவிட அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் அதிக அளவில் காணப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை சுவிட்சர்லாந்தின் , Aargau மகாணம்தான் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனைகள் தற்போடு அருகிவிட்டதனால் சுவிட்சர்லாந்த்தில். தற்போது எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் குறித்த மிகச்சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.