உலக சந்தையில் இன்றைய தினம் (24) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1982.72 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் (23.04.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2002 அமெரிக்க டொலர்களாக உலக சந்தையில் பதிவாகியுள்ளது.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவில் தங்கத்தின் விலை சிறியளவான ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 180,300 ரூபாவாக காணப்படுகிறது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.