• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா வாழ் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

Apr. 18, 2023

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

கணிதம், எழுத்து மற்றும் வாசிப்பு திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் இவ்வாறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் ஆசிரியர்களை உள்ளீர்ப்பதற்காக அரசாங்கம் 180 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பிள்ளைகளின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என மாகாண கல்வி அமைச்சர் ஸ்டீபன் லீஸ் தெரிவித்துள்ளார்.

எழுதுதல், வாசித்தல் மற்றும் கணித அறிவினை தங்களது பிள்ளைகள் விருத்தி செய்து கொள்ள வேண்டுமென அநேக பெற்றோர் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.பாடசாலைகளின் தரத்தை உயர்த்தவும், தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் தேவையான அடிப்படையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed