• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

Apr. 18, 2023

பெந்தோட்டை – தெட்டுவ பிரதேசத்தில் பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய் தாதி எனவும், உறங்கிக் கொண்டிருந்த சிசுவிடம் வித்தியாசம் காணப்பட்டதையடுத்து, பெந்தோட்டை அரச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து பெந்தோட்டை வைத்தியசாலையினால் இவ்விடயம் தொடர்பில் இறுதி முடிவுக்கு வர முடியாத காரணத்தினால் பெந்தோட்டை பொலிஸாரும் பஹல்கமஹா மரண விசாரணை அதிகாரி கே.வி.டி.உபாலி குமாரசிங்கவும் சடலத்தை மேலதிக விசாரணைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed