• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஹெம்மாதகம விபத்தில் வெளிநாட்டு பெண் பலி : மகளும் சாரதியும் காயம்!

Apr. 17, 2023

ம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஹெம்மாதகமவிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கார் சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த இருவரும் கம்பளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநாட்டு பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed