• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட புனித யாத்திரை சென்றவர் !

Apr. 15, 2023

களனி ஆற்றில் ஒருவர் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டியந்தோட்டை அத்தனகெலய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற சம்பவத்தில் 42 வயதுடைய நபரே இவ்வாறு நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.


களனி பிரதேசத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் வேளையில், அத்தனகெலய பிரதேசத்தில் களனி ஆற்றுக்கு அருகில் உணவு அருந்திவிட்டு கைகளை கழுவச் சென்ற போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.


அவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், கடற்படையினருடன் இணைந்து குறித்த நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed