வரலாற்று சிறப்புமிக்க யாழ். தாவடி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்ற நிலையில் கொடியேற்ற மஹோற்சவத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ் கலந்து கொண்டார்.
மேளதாள வாத்தியங்கள் முழங்க கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.
அந்தண சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, தேவஸ்தான பிரதம குருவான க.கணபதிராஜா குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கொடியை எற்றிவைத்தனர்.
பல பாகங்களில் இருந்தும் வருகை வந்த பக்தர்கள் இந்த கொடியேற்றத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்த நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகரான ஜெய் ஆகாஷ் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




