பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமையோடு சேர்ந்து நாளைய தினம் 30-4-2025 ஆம் தேதி அட்சய திருதியை வரவிருக்கிறது. இந்த நாளில் அனைவருக்கும் தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க வேண்டும் என்று, அந்த மகாலட்சுமியே பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.
அட்சய திருதியை அன்று கட்டாயம் தங்கம் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எத்தனை ஆன்றோர்கள், சான்றோர்கள், முன்னோர்கள், ஜோதிடர்கள் சொன்னாலும், வீட்டில் இருக்கும் பெண்களுடைய மனது எப்போது திருப்தி அடையும்.
அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ஆவது வாங்கும்போதுதான் அவர்களுக்கு மனதிருப்தி. அதுதான் உண்மையான அட்சய திருதியை ஆகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
நாளைய தினம் என்னென்ன விஷயங்களை மேற்கொண்டால் அடுத்த வருடத்திற்குள் நிறைய தங்கம் சேரும். இந்த வருடம் தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு எளிய ஆன்மீக குறிப்பு. எங்களிடம் வீட்டில் தங்க நகைகள் இருக்கிறது.
பழைய தங்க நகைகளை அட்சய திருதியை அன்று என்ன செய்தால் மேலும் மேலும் புது தங்கம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்பதைப் பற்றியும் ஒரு ஆன்மீகம் சார்ந்த குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக. இது போக அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை சீக்கிரம் மீட்டு எடுக்க நாளை என்ன செய்ய வேண்டும்.
அதற்கும் ஒரு ஆன்மீக குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.ஆன்மிக புத்தகங்கள் அட்சய திருதியை 2025 முதலில் நீங்கள் புது தங்க நகை அதிகம் வாங்கி சேர்க்க வேண்டும் என்று நினைக்க கூடிய பெண்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும். நாளைய தினம் அட்சய திருதியை அன்று அதிகாலை வேலையிலேயே சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளிக்க வேண்டும்.
குளிக்கும் தண்ணீரில் “அட்சயம்” என்ற வார்த்தையை எழுதி எனக்கு மேலும் மேலும் தங்கம் பெருகும் யோகம் தேவை. இந்த தீர்த்தம் கங்கா தீர்த்தமாக மாறட்டும்.
என்னுடைய தரித்திரம் விலகட்டும் என்று சொல்லி அந்த தண்ணீரில் முதலில் குளித்து விட வேண்டும். நாளைய தினம் பெண்கள் இதுபோல குளிக்கும் போது கட்டாயம் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும்.
கஸ்தூரி மஞ்சள் தேய்த்து குளித்தாலும் சரிதான். சாதாரண மஞ்சள் தேய்த்து குளித்தாலும் சரிதான். மஞ்சள் தான் குருவின் கடாட்சம். குரு அருள் இருந்தால் தான் தங்கம் நிறைய சேரும். ஆக நாளைய தினம் கட்டாயம் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க அவர்கள் கையில் நிறைய தங்கம் சேரும். இந்த குளியல் கட்டாயம் சூரிய உதயத்திற்கு முன்பு இருக்க வேண்டும்.
பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். காலையில் உதிக்கின்ற சூரியனை பார்த்து ஒரு முறை வணங்கிக் கொள்ளுங்கள்.
குளித்து முடித்துவிட்டு சூரியன் நமஸ்காரம் செய்துவிட்டு, அட்சய திருதியை அன்று காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் எளிமையாக மகாலட்சுமி பூஜை செய்து குடும்பத்தோடு மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்று, வழிபாடு மேற்கொள்ளுங்கள். இதை செய்தாலே உங்களுக்கு தங்கம் வாங்கும் யோகம் கூடிவரும். எங்களிடம் கொஞ்சம் தங்க நகைகள் இருக்கிறது.
இந்த தங்க நகைகள் எப்போதும் அடகு போகக்கூடாது. எங்களோடு நிலையாக இருக்க வேண்டும். மேலும் மேலும் தங்க சேரும். வீட்டில் இருக்கும் பழைய தங்க நகைகளை என்ன செய்வது? மஞ்சள் கலந்த தண்ணீரில் தங்க நகைகளை போட்டு, சுத்தமாக கழுவி விடுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் அந்த நகைகளை கழுவி விட்டு ஒரு மஞ்சள் நிற துணியில் அந்த தங்க நகைகளை வைத்து தக்ஷிணாமூர்த்தியின் பாதத்தில் ஒரு முறை அந்த தங்க நகைகளை வைத்து, பிரார்த்தனை செய்தால் உங்களிடம் இருக்கும் தங்கம் நிலையாக தங்கும்.
அல்லது இந்த தங்க நகைகளை தட்சிணாமூர்த்தியின் பாதத்தில் வைத்துவிட்டு அடமானத்தில் இருக்கும் தங்க நகைகள் திரும்பவும் வீட்டிற்கு வர வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுடைய வீட்டில் தங்கமே இல்லை எனும் பட்சத்தில் ஒரு துண்டு விரலி மஞ்சள், தட்சிணாமூர்த்தியின் பாதத்தில் வைத்து, அடமான நகையை மீட்க வேண்டும் என்று நினைத்து அந்த மஞ்சள் கிழங்கை கொண்டு வந்து பீரோவில் நாளைய தினம் வைத்தாலும் அடமானத்தில் வைத்த தங்க நகைகளை சீக்கிரம் மீட்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கும்.
நாளைய தினம் புது தங்க நகை வாங்குவதற்காக சீட்டு கட்ட துவங்கலாம். இந்த வருடம் தான் நகை வாங்க முடியவில்லை.
அடுத்த வருடமாவது தங்க நகை சேர்க்கலாம் என்ற ஒரு உள்நோக்கத்தோடு மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சீட்டாக கட்டி வரலாம். இதுபோல தங்கம் வாங்க பணம் சேர்க்கும் திட்டத்தை நாளைய தினம் நீங்கள் துவங்கும்போது, அது உங்களுக்கு லாபகரமாக அடுத்த வருடம் அமையும்
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா
- அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது
- அட்சய திருதியை 2025
- கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி!