யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா நிகழ்வு திங்கட்கிழமை (28) மிக சிறப்பாக இடம்பெற்றது.
பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள்,பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனொரு அங்கமாக பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது.










