வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள்
மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இன்றைய இராசிபலன்கள் (26.04.2025)
சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிசார் மற்றும் திடீர்மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.