யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றின் உரிமையாளருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டுள்ளது.
யாழில் அதிகரிக்கும் சிக்கன்குனியா.
குறித்த உணவகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, கழிவு நீரினை வெளிச்சூழலிற்கு வெளியேற்றியமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது
சுவிஸில் மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை இழந்த தமிழர்கள்
குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை, கையில் வெட்டுக்காயங்களுடன் உரிய பாதுகாப்பு கவசம் இல்லாமல் உணவினை கையாண்டமை போன்ற குற்றச்சாட்டுகளிற்கு எதிராக குறித்த உணவகத்துக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.