நம் ஒவ்வொருவருக்கும் பிரம்மர் எழுதிய தலையெழுத்து என்று ஒன்று இருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே பிரம்மர் நல்ல விதத்தில் தலையெழுத்தை எழுதி இருப்பார்.
பலருக்கும் தங்கள் வாழ்வில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்க கூடிய தலையெழுத்தை எழுதி இருப்பார். அப்படிப்பட்ட மோசமான தலையெழுத்தை மாற்றுவதற்கு தாங்கள் அனுபவிக்க கூடிய கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கும் சிவபெருமானை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரம் .
தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம் சிவபெருமானுக்குரிய நாளாக திகழக் கூடியது தான் திங்கட்கிழமையும் பிரதோஷ நாளும். இந்த முறை தேய்பிறை பிரதோஷம் என்பது ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரவாரம் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த பிரதோஷத்தை சுக்கிர பிரதோஷம் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பிரதோஷ நாளில் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கு சிவபெருமானை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம். –
பொதுவாக பிரதோஷ நாளில் பலரும் விரதம் இருந்து சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக அபிஷேக பொருட்களையும் அலங்காரத்திற்காக மலர்களையும் வாங்கி தருவது உண்டு.
மேலும் நமக்கு தெரிந்த சிவபெருமானின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்போம். ஒரு சிலர் தங்களுடைய இல்லத்தில் இருக்கக்கூடிய ஸ்படிக லிங்கத்திற்கோ அல்லது பானலிங்கத்திற்கோ வீட்டிலேயே எளிமையான முறையில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள்.
எப்படி நாம் சிவபெருமானை வழிபாடு செய்தாலும் சிவபெருமானுக்குரிய பிரதோஷ நேரமான மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வீட்டில் சிவலிங்கம் இருக்கும் பட்சத்தில் அந்த சிவலிங்கத்திற்கு பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒருவேளை வீட்டில் சிவலிங்கம் இல்லை என்றால் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை ஒருமுறை முழுமனதோடு சிவபெருமானை நினைத்து கூறினால் போதும்.
ஒருவேளை பிரதோஷ நேரத்தை தவற விட்டவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து 7:30 மணிக்குள் இந்த முறையில் எளிமையான வகையில் பூஜை செய்து சிவபெருமானின் மந்திரத்தை கூறலாம். இப்படி ஒரு முறை கூறுவதன் மூலம் சிவபெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நாம் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மோசமான தலையெழுத்தையும் நல்ல தலை எழுத்தாக மாற்ற முடியும்.
மந்திரம் “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்” இதையும் படிக்கலாமே:வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம் சிவபெருமானுக்கு பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன.
அந்த மந்திரங்களில் மிகவும் சிறப்பு மிகுந்த காயத்ரி மந்திரமான இந்த மந்திரத்தை தேய்பிறை பிரதோஷ நாளான இன்று பிரதோஷ நேரத்தில் முழு மனதோடு ஒரு முறை மட்டும் கூறி பாருங்கள். உங்கள் வாழ்வின் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
- தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம்
- உதயநாளின் நினைவுகூறல் திரு.நடராசா சின்னத்துரை(25.04.2025)
- யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலை
- கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை !
- காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை