• Do.. Apr. 24th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மன அமைதிக்கு பௌர்ணமி வழிபாடு

Apr. 24, 2025

மனதில் அமைதியும், நிம்மதியும் இருந்தால் தான் நம் வாழ்க்கையில் வெற்றியும் நம்மை தேடி வரும். அமைதி கொள்ளாமல், ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும் மனது, அலை பாய்ந்து கொண்டே இருக்கும். இப்படி அலைபாயும் உங்கள் மனதை சாந்தப்படுத்துவதற்கு, பௌர்ணமி நாளில் சந்திர பகவானை வழிபட வேண்டும்.

சந்திர பகவான் மன அமைதிக்கு வழி வகுத்து கொடுப்பவர். இவரின் பாதங்களை பற்றி எப்படி வழிபடுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த ரகசியத்தை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். மனம் சாந்தம் பெற, எதையும் சிந்திக்காமல் நேர்வழியில் நடப்பதற்கு சந்திரபகானுடைய அருள் தேவை. ஜாதகத்தில் சந்திர தோஷம் இருப்பவர்களது மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். எது சரி? எது தவறு? என்று அவர்களுக்கே புரியாமல், தோன்றுபவை எல்லாம் நல்லவை என்று நினைத்து செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பௌர்ணமி வழிபாடு சிறந்த பலன் கிடைக்க பேருதவி செய்யும்.

சந்திர பகவான் மன அமைதிக்கு காரகத்துவம் கொண்டுள்ளவர். மனதை சாந்தப்படுத்தவும், நிலைப்படுத்தவும் அடிக்கடி சந்திர பகவானை வழிபட வேண்டும். சந்திர பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் வெள்ளை. வெள்ளை நிற பொருட்களைக் கொண்டு சந்திர பாகவானை அர்ச்சனை செய்தால், மனதளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து மிகப்பெரிய மாற்றங்கள் நம் வாழ்க்கையில் நடக்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாள் அன்று மாலை வேளையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சந்திரனுக்கு உரிய பச்சரிசியை போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். அதன் மீது மூன்று மஞ்சள் கிழங்குகளை வைத்து, அதற்கு குங்குமம் பொட்டு வையுங்கள். ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் அல்லது வெள்ளி நாணயங்கள் இருந்தால் அவற்றையும் அரிசியின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு பூஜைகள் முடிந்த பின்னர், அந்த தட்டை கொண்டு போய் சந்திரனை பார்த்து காண்பிக்க வேண்டும். அந்த சமயத்தில் கீழ் வரும் இந்த மந்திரத்தை 21 முறை சொல்லுங்கள். மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது, தாம்பூல தட்டை சந்திரனுக்கு காண்பியுங்கள். மந்திரத்தை உச்சரித்த பின்னர் மனதார மன அமைதி வேண்டி, சந்திர பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சந்திர பகவான் மந்திரம் : ஓம் சந்திரமவுலீஸ்வராய நமஹ!!! இதையும் படிக்கலாமே: 25-4-2025 வானில் தோன்றும் அதிசய நிலா பிரார்த்தனை செய்து முடித்த பின்பு தாம்பூல தட்டை கொண்டு போய் பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் வரை அது அங்கேயே இருக்கட்டும். அதன் பின்பு காலையில் அந்த பச்சரிசியுடன் வெல்லத்தை கலந்து ஜீவராசிகளுக்கு கொடுத்து விடுங்கள்.

மஞ்சள் கிழங்கை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நாணயங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். இது போல தொடர்ந்து 21 பௌர்ணமிகள் சந்திர பகவானை வேண்டி, மந்திரம் ஜபித்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான மனம் சார்ந்த பிரச்சினைகளும் தீர்ந்து, அமைதிபடும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. 21 பௌர்ணமிகள் பூஜை செய்த பின்பு நாணயங்களை ஏதேனும் கோவில் உண்டியலில் சமர்ப்பிக்கலாம் அல்லது நற்காரியங்களுக்கு, தானம் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று அதனை செலவு செய்யாதீர்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed