• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கோரம் ! திருட சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி : !

Apr. 20, 2025

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்றையதினம் (20) களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி (வயது69 )பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இன்று(20) காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் அயல்வீட்டு இளைஞன் (வயது 20) திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளான்.

இந்நிலையில் குறித்த வயோதிப பெண் அந்த இளைஞனை கண்டவேளை அந்த இளைஞன் கொட்டன் ஒன்றினால் குறித்த பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளார்.

தடயவியல் காவல்துறையினருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed