• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குழந்தைகள் நன்றாக படிக்க தூங்கும் போது செய்ய வேண்டியது

Apr. 20, 2025

அந்த காலத்தில் எல்லாம் ஏழு பிள்ளைகள் எட்டு பிள்ளைகள், 10 பிள்ளைகள் என்று வீட்டில் இருப்பார்கள். குழந்தை செல்வத்திற்கு குறைவே இருக்காது. இன்றைக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை பெற்று விட்டு பெற்றவர்கள் படும் பாடு வார்த்தையால் சொல்ல முடியாது.

யாழில் கோரம் ! திருட சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி : !

இன்றைய சூழ்நிலையில் பிள்ளைகளைப் பற்றிய கவலையே பெற்றவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. பிள்ளைகளுடைய எதிர்காலம் நன்றாக இருக்கவும், அவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் செய்ய வேண்டிய ஒரு சூட்சமமான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதில் எந்த ஆன்மீகமும் இல்லை, ஆனால் முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் சிறந்தவர்களாக மாறுவார்கள்.

அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை கூட சரி செய்யும் அளவுக்கு இந்த பரிகாரத்திற்கு சக்தி இருக்கு. ஆனா பரிகாரம் செய்ய எந்த கஷ்டமுமே நமக்கு தேவை கிடையாது. விளக்கு ஏற்றினும், பூஜை செய்யணும் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. இது ஒரு ட்ரீட்மென்ட் அப்படி என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது !

சில வெளிநாட்டவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றுவதாகவும் பிரபல ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதைத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்தால் பெற்றவர்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவே வேண்டாம்.

ஒன்றுமே இல்லைங்க. உங்களுடைய பிள்ளைகள் தூங்குவாங்க இல்லையா. அவர்கள் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற உடன்,. பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார்களா இல்லையா என்று, கட்டாயம் பெற்றவர்களுக்கு தெரியும்.

பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது அவர்களுடைய தாயோ அல்லது தந்தையோ அந்த பிள்ளைகளின் மீது என்ன ஆசை வைத்திருக்கிறீர்கள், என்ன கனவு வைத்திருக்கிறீர்கள் அதை அவர்களுடைய காதில் சொல்ல வேண்டும்.

மன்னாரில் பள்ளமடு பகுதியில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு

உதாரணத்திற்கு “நீ நல்லா படிப்ப, நல்ல வேலைக்கு போவ, எதிர்காலத்தில் உயர்ந்த பதவி உனக்கு கிடைக்கும். எதிர்காலத்தில் உன்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்காலத்தில், உன்னுடைய வாழ்க்கை செல்வச் செழிப்போடு வளமாக இருக்கும். உனக்கான ஆரோக்கியம் பெருகும்” இப்படி எல்லாம் சொல்லிப் பாருங்கள். நீங்கள் உங்களுடைய பிள்ளைகளுடைய காதில் என்ன சொல்கிறீர்களோ அதுதான் நடக்கும்.

அவர்களுடைய மூளைக்குள் சென்று அவர்களுடைய ஆழ் மனதில் பதிந்து விடுமாம். இது ஒரு விஷயம். நீங்க இதை ட்ரை பண்ணி பாருங்க. எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு உங்களுக்கே தெரியும்.

இன்னொரு விஷயமும் இருக்கிறது.‌ உங்களுடைய வீட்டில் முதியவர்கள் யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சரி, அல்லது உங்கள் கணவருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் வேறு யாருக்காவது உடம்பு சரியில்லை என்றாலும் சரி, குறிப்பிட்ட அந்த நபர் தூங்கும் போது அவர்களுடைய காதில் சென்று உனக்கு ஒன்றும் இல்லை, உனக்கு ஆரோக்கியம் கிடைக்கும், சீக்கிரம் உடல் நலம் சரியாகிவிடும் என்று சொன்னால் அவர்களுடைய அந்த பிரச்சனை சீக்கிரம் சரியாகும் என்று நம்பப்படுகிறது.

நீண்ட நாட்களாக உங்களுடைய வீட்டில் யாரேனும் படிக்கையில் இருந்தால் அவர்களுடைய காதிலும் நீங்கள் இதுபோல அவர்களுக்கு நம்பிக்கை தரும்படி, அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, அவர்களுக்கு நம்பிக்கை தரும்படி பேசி பாருங்கள். நிச்சயம் அவர்களுக்கு இருக்கும் நோய் நொடி பிரச்சனை மனவேதனை எல்லாம் சரியாகி சீக்கிரம் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். இந்த எளிமையான விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed