• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது !

Apr. 20, 2025

வௌிநாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (20) அதிகாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதான பிரேஸில் பிரஜை என தெரியவந்துள்ளது.அவர் 4 கிலோ 855 கிராம் எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதுடன், அதன் மதிப்பு 240 மில்லியன் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் தெதெரிவித்தனர்.

சந்தேக நபர் மிக சூட்சுமமான முறையில், அவற்றை அட்டைப் பெட்டியில் ஒட்டி, அதன் மேல் கருப்பு காகிதத்தை ஒட்டி, தலா 2 அட்டைகள் என 7 சிறிய பைகளில் அடைத்து, பின்னர் ஒரு சூட்கேஸில் அடைத்து வைத்திருந்ததாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியையும், பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed