• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு

Apr. 19, 2025

நாம் ஒவ்வொறுவரும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருப்போம். அந்த முயற்சியில் எந்தவித தடைகளும் வரக்கூடாது, அந்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த முயற்சி செய்ய ஆரம்பிப்போம்.

இருப்பினும் ஒரு சிலருக்கு தொட்ட காரியங்கள் எதிலும் வெற்றிகளை ஏற்படாது. ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு அது தள்ளி சென்று கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு நாம் செய்யக்கூடிய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கக்கூடிய தெய்வமாக தான் விநாயகர் பெருமான் திகழ்கிறார்.

முழு முதற் கடவுளாக திகழக் கூடிய விநாயக பெருமானை வழிபாடு செய்துவிட்டு நாம் தொடங்கக் கூடிய எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாகவே நடைபெறும் என்றுதான் நம்முடைய முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும் என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

விநாயகப் பெருமானை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் வழிபடலாம். எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். போகும் வழியில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை பார்த்து மனதார வழிபாடு செய்து விட்டு சென்றால் கூட அந்த காரியத்தில் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

நீக்கமற நிறைந்திருக்கக் கூடிய விநாயகப் பெருமானை சில சூட்சமமான முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். ஒரு முயற்சியை நாம் செய்கிறோம், அந்த முயற்சியில் நமக்கு எந்தவித தடைகளும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் அவர்கள் பிறந்த கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கக்கூடிய விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இரண்டு தேங்காய் எண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு கையில் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானை ஒன்பது முறை வலம் வர வேண்டும். –

வலம் வந்து முடித்த பிறகு அந்த தேங்காயை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் செய்யக்கூடிய காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படக்கூடாது தடைகள் அனைத்தும் தவிடு பொடியாக வேண்டும் என்று விநாயகப் பெருமானிடம் மனதார வேண்டிக்கொண்டு அந்த தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் தங்களுடைய பிறந்த கிழமை அன்று இந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் மட்டுமே உண்டாகும்.

முழுமனதோடு விநாயகப் பெருமானின் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும், தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed