• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

Apr. 19, 2025

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 23ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளன.

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed