• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!

Apr. 18, 2025

தமிழ் வருடம் பிறந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.

அதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஐஸ்வர்யமும் பெருக ஆரம்பிக்கும். அம்பிகையின் அருள் இருந்தால்தான் செல்வ செழிக்கும் உயரும் என்பதால் சித்திரை முதல் வெள்ளிக்கிழமை நாம் கண்டிப்பான முறையில் அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது பெண் தெய்வங்களுக்கு உரிய கிழமையாக திகழ்கிறது. அன்றைய நாளில் அம்பிகை, மகாலட்சுமி போன்ற தெய்வங்களை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். செல்வ செழிப்பு உயரும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதனால் தான் எந்த நாளில் நாம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடா விட்டாலும் வெள்ளிக்கிழமை அன்று தீபமேற்றி வழிபாடு செய்வோம். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. அதிலும் வருடம் பிறந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் உண்டாகும்.

இந்த வழிபாட்டை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். தங்களுடைய வசதிக்கேற்ப எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்கிறீர்களோ அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்கள் அனைத்திற்கும் மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் போல் பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தையும் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 11 நாணயங்களை பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நாணயங்கள் ஒன்றன் மேல் ஒன்று இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இந்த நாணயத்திற்கும் மேல் மூன்று அகல்விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபம் வடக்கு பார்த்து இருப்பது போல் ஏற்ற வேண்டும். பிறகு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை இந்த தீபத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது தரையில் ஒரு விரிப்பை விரித்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு “ஓம் சக்தி ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.

இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு குளிர வைத்த பிறகு அந்த தட்டில் பரப்பி வைத்த நாணயத்தை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நாணயங்களில் ஒரு நாணயம் ஆவது எப்பொழுதும் நம்முடனே இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். செலவு செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி நாம் சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம் அம்பிகையின் அருளோடு மட்டுமல்லாமல் அஷ்ட லட்சுமிகளின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

அதன் மூலம் ஐஸ்வரியம் பெருகும், செல்வ செழிப்பு உயரும். இதையும் படிக்கலாமே:கடன் தீர குபேர பஞ்சமி பரிகாரம் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அதிலும் சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த நாளில் மறவாமல் அம்பிகையை முழுமனதோடு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எந்தவித குறையும் இல்லாமல் நிறைவாக வாழ்வார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed