யாழ். வடமராட்சி, பொலிகண்டி கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் நெறிப்படுத்தினார்கள்.