• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குபேர பஞ்சமி தீபம் ஏற்றும் முறை

Apr. 16, 2025

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய தேய்பிறை பஞ்சமி என்பது இந்த தமிழ் வருடத்தின் முதல் பஞ்சமியாக திகழ்கிறது.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இந்த பஞ்சமி வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதால் இதை குபேர பஞ்சமி என்று கூறுகிறோம்.

வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள், எதிரிகள், கஷ்டங்கள், துயரங்கள் என்று அனைத்தும் காணாமல் போகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனுக்குரிய பஞ்சமி என்பது இந்த முறை வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது.

இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

இந்த வருடத்தின் முதல் வியாழக்கிழமை முதல் பஞ்சமியான இது குபேர பஞ்சமியாக திகழ்வதால் இதற்கு கூடுதல் சிறப்பும் இருக்கிறது. இந்த நாளில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் இந்த வருடம் முழுவதும் நம்முடைய பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.

இந்த தீபத்தை மாலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளோ அல்லது இரவு 8:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள்ளோ வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டும். வீட்டில் வாராஹி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஒரு நாற்காலியை வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதற்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டிற்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்திருக்க வேண்டும். பிறகு அந்த தாம்பாளத்தின் மீது வாசனை மிகுந்த மலர்களை பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்திற்கு முன்பாக வேக வைக்காத கிழங்கு வகைகள் எது இருக்கிறதோ அதை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபத்தில் வாராகி அம்மன் இருப்பது போல் மனதார நினைத்துக் கொண்டு அந்த தீபத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அவ்வாறு வலம் வரும்பொழுது “ஓம் வாராகி தேவியே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை முழுமனதோடு கூறிக் கொண்டே வலம் வர வேண்டும்.

ப்படி நாம் தீபமேற்றி வாராகி அம்மனை குபேர பஞ்சமி நாளன்று வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கடன் தீரும். மேலும் நம்முடைய பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:லாபம் பெருக வியாபாரிகள் சொல்ல வேண்டிய மந்திரம் மிகவும் எளிமையான இந்த தீபத்தை குபேர பஞ்சமி நாளன்று ஏற்றி வைத்து வாராகி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பண தேவைகள் பூர்த்தியடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed