வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் , தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று நடைபெற்றது.
இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதியுலா வலம் வந்தார்.
இந்த உற்சவத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டு இஷ்டசித்திகளை பெற்றனர்.
இதேவேளை தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுகள் வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல கோயில்களில் இன்று (14) காலை இடம்பெற்றது.