• Di.. Apr. 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றைய ராசிபலன் – 14.04 2025

Apr. 14, 2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நற்பண்புகள் வளரும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய வேலைகளை மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்கள் கையைத் தேடி பணம் வரக்கூடிய நாளாகவும் இருக்கும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று எந்த புது பொருளை வாங்கினாலும் அது உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வீட்டில் தேவையான பொன் பொருள் எது வேண்டும் என்றாலும் வாங்கலாம். இந்த நாள் சந்தோஷமான நாளாக இருக்கும். குடும்பத்தோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். தமிழ் புத்தாண்டு இனிதே நிறைவடையும். –

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல ஓய்வு இருக்கும். வேலையையும் வியாபாரத்தையும் நேரத்திற்கு முடித்துவிட்டு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் தெரியும். வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை பெறுவீர்கள். மனநிறைவான இந்த நாளில் இறைவழிபாட்டில் நேரத்தை செலவு செய்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளுடன் ஒன்று சேர்ந்து நேரத்தை செலவழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வயதானவர்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம், பேரம் பேத்திகளை சந்தித்து, சந்தோஷமாக விளையாடுவது இதுபோல தருணங்களில் முதியவர்களுடைய மனது இன்று குளிரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுடைய இந்த நாள் ரொம்பவும் அமைதியான நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய தமிழ் புத்தாண்டு சிறப்பாக நிறைவடையும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரிவு சரியாகும். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. –

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். மனைவிக்கு தேவையான பொருட்களை வாங்கி பரிசு கொடுக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரம் விருத்தி அடையும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சக ராசி காரர்களுக்கு, இன்று சின்ன சின்ன சிரமங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய வேலையில் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் இருக்கும் டென்ஷனை குடும்பத்தாரிடம் காட்டக் கூடாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடனை வசூல் செய்து விடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். இன்று நீங்கள் தொட்டதெல்லாம் லாபகரமாக அமையும். மகரம் மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். டிஸ்கவுன்டில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம். தெரியாத நபரோடு பழக்கங்கள் வைத்துக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லாதீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன டென்ஷன்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பிட்ட வேலையை, குறிப்பிட்ட நேரத்திற்கு செய்து முடிக்க முடியாது. சின்ன சின்ன சிரமங்களால் டென்ஷன் ஏற்படும். தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்றைய நாளை கொஞ்சம் பொறுமையாக கையாளுங்கள் இனிதே அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும்‌. குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். உடல் உபாதைகள் வரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed