• Di.. Apr. 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புன்னாலைக்கட்டுவான் வடக்கு பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

Apr. 13, 2025

பேரதெனியா பல்கலைக்கழத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்த வேளை அவரை அழைக்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில்  பலாலி கிழக்கு, பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது- 62) என்பவர் உயிரிழந்துள்ளார்.

பேரதெனியா பல்கலைக்கழகத்திலிருந்து புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் வருகை தந்த மகளை அழைத்து செல்வதற்காக அதிகாலை பலாலியில் உள்ள தனது வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில்,  பழுதடைந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed