• Mo.. Apr. 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள கோரிக்கை

Apr. 13, 2025

வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோருக்கு இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) விசேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் மின்சார தேவை குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தேசிய மின்சார கட்டமைப்பிற்கு மிகவும் மாறுபடும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு தேசிய அமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அமைப்பின் செயலற்ற தன்மை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதில் ஏற்படும் மிகச் சிறிய ஏற்ற இறக்கங்கள் கூட பகுதியளவிலான மின் தடை அல்லது நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமெனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே, மேற்படி காலப்பகுதிக்குள் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க, தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மக்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை | Sri Lanka Electricity Board Power Saving Request
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed