• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தலையெழுத்து மாற முருகன் மந்திரம்

Apr. 11, 2025

பிரம்மா அவன் இஷ்டத்திற்கு என்னுடைய தலையில் விதியை எழுதி விட்டான். வாழ்க்கை தாறுமாறாக கோளாறாக செல்கிறது. இந்த பிரச்சனையில் இருந்து எல்லாம் விடுபட வேண்டும், நிம்மதி இழந்திருக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் நிம்மதி பிறக்க வேண்டும் என்றால், இன்றைய தினம் முருகன் முன்பு படிக்க வேண்டிய மிக முக்கியமான பாடல் வரிகள் இது.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்

இன்று வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் விரதம் அல்லவா. நேரம் இப்போது 12 மணி ஆகிவிட்டது. இதற்கு முன்பு முருகர் வழிபாட்டை செய்து முடித்தவர்கள், இந்த பாடலை படித்தீர்களா. படிக்காதவர்கள் இன்று மாலை 6:00 மணிக்கு முருகன் முன்பு விளக்கு ஏற்று இந்த பாடலை படியுங்கள். எதுவுமே முடியாதா இருந்த இடத்திலிருந்து முருகா முருகா முருகா என்று கூப்பிட்டு இந்த பாடலை படிச்சுருங்க. உங்கள் தாறுமுறான தலை எழுத்து மாறிவிடும் நல்லதே நடக்கும்.

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா(11.04.2025) 

– முருகன் பாடல் சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; பலியான மகன்

நிறைய முருகர் பக்தர்களுக்கு இந்த பாடல் கட்டாயம் தெரிந்திருக்கும். அருணகிரிநாதர் அவர்கள் நமக்கு கொடுத்த கந்தர் அலங்காரத்தின் 40 ஆவது பாடல் வரிகள் இவை. இன்று இந்த பங்குனி உத்திர நாளில் இந்த பாடலை படிக்காமல் இருந்தால் முருக வழிபாடு முழுமை அடையுமா? நிச்சயம் முருகர் வழிபாடு முழுமை அடைய வேண்டுமென்றால் இன்றைய தினம் இந்த நான்கு வரி பாடல் மிக மிக அவசியமான ஒன்று. இந்த நேரத்தில், இந்த நன்னாளில் இந்த பாடலை முருக பக்தர்களான உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. இன்னும் பங்குனி உத்திரத்திம் நிறைவடைய நேரம் இருக்கிறது.

முருகரை மனதில் நிறுத்துங்கள் பாடலை ஒரு முறை படியுங்கள். தலையெழுத்து நல்லபடியாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டிய முருகன் மந்திரம் உங்களுக்கு தற்போது சூழ்நிலையில் வாழ்க்கையில் என்ன கஷ்டம் பெருசாக இருக்கிறது. அந்த கஷ்டம் சரியாக முருகப்பெருமானை வேண்டி இந்த பாடலை படித்தால் நீங்கள் வைத்த வேண்டுதல் நிச்சயம் அடுத்த 11 நாட்களில் நிறைவேறும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed