• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விபத்தில் சிக்கிய குடும்பம் ; மகன் பலி

Apr. 11, 2025

மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா(11.04.2025) 

திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்கந்த சந்திக்கு அருகில் திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிஷேகம்

விபத்தில், மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், அவரது இரட்டை மகன்களும் பாட்டியும் படுகாயமடைந்து மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மினுவாங்கொடை, வேகொவ்வ பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் ஆவார். காயமடைந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், மற்றைய மகனும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் சிக்கிய ஓமந்தை மத்தியகல்லுாரி ஆசிரியர் பலி

உயிரிழந்த சிறுவனின் சடலம் மினுவாங்கொடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed