குருவின் நட்சத்திர மாற்றம் இன்று (10) மாலை 07:51 மணிக்கு இடம்பெறவுள்ளது. ரோகிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு தற்போது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையவுள்ள நிலையில், இதனால் 4 ராசிகளுக்கு நன்மை உண்டாகும்.
இன்று முதல் குரு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்து 63 நாட்கள் பயணிப்பார். இதனால் சிம்மம் உட்பட 4 ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்.
நன்மை பெறும் ராசிகள்
சிம்மம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். நிதி நிலை வலுவடையும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். லாபம் கிடைக்கும். பதவி மற்றும் கௌரவ உயர்வு கிடைக்கலாம்.
துலாம்: குருவின் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டி தேர்வுகளின் சாதகமான முடிவு கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கலாம் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கலாம். ஏப்ரல் 10 முதல் ஜூன் 13 வரை சில நல்ல செய்திகளை பெறலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் பெறலாம், வெற்றி வாய்ப்புகள் குவியும். ஊழியர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். ஏப்ரல் 10 முதல் ஜூன் 14 வரையிலான நேரம் சாதகமாக இருக்கும். பண நெருக்கடி நீங்கி வருமானம் பெருகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
கும்பம்: குருவின் ஆசியால் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில செய்திகள் கிடைக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். இந்த நேரம் சாதகமாக இருக்கும், வெற்றி குவியும். பண மழை கொட்டும். வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும், அங்கு வேலை கிடைக்கும். இதனால் லாபம் உண்டாகும்.