ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை வரவேற்ற ஜேர்மனி (Germany), தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஐ.நா அமைப்பின் அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை தற்காலிகமாக நிறுத்த ஜேர்மனி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை ஜேர்மன் புலம்பெயர்தல் மற்றும் அகதிகளுக்கான ஃபெடரல் அலுவலகம் உறுதிசெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தாங்கள் முதலில் வந்திறங்கிய நாட்டில் தங்க முடியாத நிலையிலிருக்கும், எளிதில் ஆபத்துக்குள்ளாக வாய்ப்புள்ள சிறுவர்கள், சித்திரவதைக்கு ஆளானோர் அல்லது மருத்துவ சிகிச்சை அத்தியாவசியமாக தேவைப்படும் அகதிகளை இலக்காக கொண்டு இந்த அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் செயல்படுகின்றது.
இந்தநிலையில், ஜேர்மனியில் அடுத்த அரசை அமைப்பதற்காக Christian Democrat (CDU) கட்சி மற்றும் Social Democrats (SPD) கட்சி ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கின்றது.
இதனால் தற்போது அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜேர்மனி தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.