அண்மைக்காலமாக இளைஞர்களிடையே இதய நோய்கள் அதிகரித்து வருவதாக மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கவலை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதய நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேரை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும்.
ஒட்டுமொத்தமாக பதிவாகும் இறப்புகளில் 20% கரோனரி ஆர்டரி நோயால் (CAD) ஏற்படுவதாக அவர் வெளிப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15% அதிகரித்துள்ளதாகவும், இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகள் மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்