வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் . மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் பங்குனி திங்களின் இறுதி நாளான 4 ஆம் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவ வழிபாடுகள் இன்று (07) பக்திபூர்வமாக இடம்பெற்றன.
யாழ். மாவட்டத்தில் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதேவேளை மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் இரு மட்டுமல்லாது வேறு பிரதேச மக்களும் பங்குனித் திங்கள் கடைசி நாளான இன்று ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அதோடு ஒவ்வொருவருடமும் பங்குனி திங்களில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளுக்கு பெருமளவான பக்தர்கள் பொங்கல் செய்து வழிபட்டு வருகின்றமை விட்சேட அம்சமாகும்.









