• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மீண்டும் உயர்ந்துள்ள முட்டையின் விலை

Apr. 6, 2025

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உச்சம் தொட்ட முட்டை விலை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Egg Price Hike

மேலும், முட்டைக்கான நியாயமான விலையை நிர்ணயம் செய்து முட்டை உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed