2025ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (4) முதல் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை விண்ணப்பதாரிகளிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.