• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்!

Apr. 3, 2025

ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது சொந்த ஊரில், தனது வீட்டின் அருகே சமந்தாவிற்காக சிறப்பாக ஒரு கோவில் கட்டியுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது இந்திய படங்களை தாண்டி வெப் சீரிஸில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் ஆகி வருகிறார்.

2007-ம் ஆண்டு “ஜேமி” திரைப்படத்தின் மூலம் நடிகை என அறிமுகம் ஆனார், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது,

மேலும், அவர் ராக்ட் பிரம்மாண்டம் எனும் வெப் தொடரிலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் தெனாலியில் நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டியுள்ளார் ஒரு ரசிகர்.

இந்த கோவில் 2023-ஆம் ஆண்டு, சமந்தாவின் பிறந்த நாளுக்கு ஒட்டி திறந்து வைக்கப்பட்டதுடன் சமந்தாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இது சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.   

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed