யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
வாகனத்தினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 பொதிகள் மீட்கப்பட்டன எனவும், அவற்றின் நிறை சுமார் 100 கிலோ எனவும், அவற்றினை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மீட்கப்பட்ட கஞ்சா , கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.