• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் குறைந்தது பெட்ரோல் விலை –

März 31, 2025

இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெட்ரோலின் விலையைக் குறைத்துள்ளது.

செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

யாழில் 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 299 ரூபாவாகும்

அதேபோல், ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 361 ரூபாவாகும்.

யாழில் தடுப்பூசி போடப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஆனால் ஏனைய எரிபொருட்களை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி, லங்கா வெள்ளை டீசல் 286.00 ரூபாவுக்கும் , சூப்பர் டீசல் 331.00 ரூபாவுக்கும் மற்றும் மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் என்ற அதே விலையில் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த முறை மாதாந்திர எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed