• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மியன்மாரைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

März 29, 2025

மியன்மாரில் (Myanmar) நேற்று பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மேலும் சில நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இன்று (29) அதிகாலை 4.7 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் (Afghanistan) உள்ள ஜூர்மிலிருந்து தென்கிழக்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் 226.9 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை அத்திலாந்திக் (Atlantic) பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நேற்று (28) நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது

பிரேசிலிலிருந்து 585 கிலோமீற்றர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed