இன்றைய தினம் வெள்ளிக்கிழமை. மீனாட்சி அம்மனை நம்முடைய வீட்டிற்கு வரவேற்று வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி , உங்களுடைய கஷ்டத்தை போக்க முடியும்.
மீனாட்சி அம்மனை நினைத்து இந்த 1 வரி மந்திரத்தை சொல்லி, இன்றைய தினம் இந்த விளக்கை யாரெல்லாம் உங்கள் வீட்டில் ஏற்றி, மீனாட்சியம்மனை வீட்டிற்குள் அழைக்கிறீர்களோ, அவர்கள் வீட்டில் எல்லாம், வறுமை எனும் கஷ்டம் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறும்.
ஒரு தாம்பல தட்டில் வாசம் நிறைந்த தாழம்பூ குங்குமத்தில் வட்டம் போட்டுக் கொள்ளுங்கள்.இந்த தாழம்பூ குங்குமத்திற்கு மீனாட்சியம்மன் குங்குமம் என்று ஒரு பெயர் உள்ளது. அந்த குங்கும வட்டத்திற்கு நடுவில் ஒரு மண் அகல் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்கவும்.
வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம். தவறவிட்டவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த விளக்கை வீட்டில் ஏற்றி மீனாட்சி அம்மனை வழிபாடு செய்யலாம்.
வீட்டில் மீனாட்சி அம்மன் திரு உருவப்படம் இருந்தால், ரொம்ப சிறப்பு. அந்த அம்பாளின் முன்பு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு “ஓம் கிலீம் மீனாட்சி தாயே போற்றி ஓம்” என்ற மந்திரத்தை 308 முறை சொல்லி, வீட்டில் இருக்கும் வறுமை நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து பாருங்கள். அவ்வளவு நல்லது உங்கள் குடும்பத்திற்கு நடக்கும். வழிபாட்டில் உங்களால் முடிந்த நெய்வேதியமும் வையுங்கள்.
வாசனை நிறைந்த தூபம் போடுங்கள். கற்பூர ஆராத்தி காண்பித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். தட்டில் இருக்கும் குங்குமத்தை சேகரித்து டப்பாவில் போட்டு தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் மீனாட்சி அம்மன் பெயரை சொல்லி, நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள்.
மரகத கல்லால் செய்யப்பட்ட பச்சை நிற மீனாட்சியை வழிபாடு செய்தால், வீட்டில் வறுமை இருக்காது. வீட்டில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருக வழிகள் கிடைக்கும். வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய படிப்பு சிறப்பாக இருக்கும்.