• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் வடமராட்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு !

März 28, 2025

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.00 மணியளவில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்குள் அத்துமீறி உள் நுழைந்த அதே பகுதியை சேர்ந்த சிலர்,அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்தியதுடன் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டையும்  மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு  அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசாருக்கு வைத்தியசாலை பொலிசாரால் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் மருதங்கேணி பொலிசார் பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று தாக்குதலுக்கு உள்ளாகியவரிடம் வாக்குமூலம் பெற்றதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed