யாழ்ப்பாணக் (Jaffna) குடாநாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் மக்கள் உடல் வெப்பத்தை தணிக்க கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்த வேண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழில் பிரபல சட்டத்தரணி மரணம்
குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் என். சூரியராஜா அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26.03.2025) அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளின் போட்பிளேயருக்கு அண்மையாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மையம் எதிர்வரும் 5ஆம் திகதியளவில் தாழமுக்கமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இதன் நகர்வு பாதை மற்றும் கரையை கடக்கும் இடம் பற்றி அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்
இந்தத் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

சிறுபோக நெற்செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்படுவது சிறந்தது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.