• Mi.. März 26th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் உணவகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

März 25, 2025

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, சுகாதர சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களை கண்டறிந்ததுடன் , அவற்றில் ஒரு உணவகத்தில் இருந்து காலாவதியான பொருட்களும் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து குறித்த உணவகங்களுக்கு எதிராக யாழ் . மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந் நிலையில் , மூன்று உணவாக உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு உணவகத்தில் காணப்பட்ட சீர்கேடுகளை சீர் செய்யும் வரையில் அதற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , மூன்று உணவகங்களுக்கும் 90 ஆயிரம் ரூபாய் , 36ஆயிரம் ரூபாய் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் என ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed