இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார்.
48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவருக்கு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தது.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.