• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் வீட்டில் திருடிய நால்வர் விளக்கமறியலில்

März 24, 2025

 யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடி மதுபானம் வாங்கி குடித்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  யாழ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்   தெரியவருகையில்   கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

  

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வீட்டின் பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் குறித்த பணிப்பெண்ணும் மூன்று ஆண்களும் இணைந்து   வீட்டில் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், திருடிய பணத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் வாங்கி அருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும்  விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் யாழ் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed