அனைத்து ராசிகளும் ஒரு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
சில ராசிகளில் இவற்றால் நல்ல பலன்களும் சில ராசிகளில் பிரச்சனைகளும் ஏற்படும். மே மாதம் குரு பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கல் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
குரு பகவான் மே மாதம் 14 ஆம் திகதி பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான பலன்களை அளிக்கும். பணி இடத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும்.
மிதுனம்
குரு பெயர்ச்சி 2025 மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும். இந்த நேரத்தில் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமான நடந்துமுடியும். நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிச்சியாக இருக்கும்.
சிம்மம்
குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குரு அருளால் வருமானம் நன்றாக இருக்கும். பெரிய லாட்டரி அடிப்பதற்கு அல்லது லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பணியிடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். நீதிமன்றத்தில் சிக்கியுள்ள வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரண அருள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றி கிடைக்கும்.
கன்னி
குரு பெயர்ச்சி 2025 கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் மரியாதை அதிகரிக்கும். குரு அருளால் செல்வம் பெருகும். புதிய வேலைகளில் வெற்றி கிடைக்கும். விறயாபாரம் விருத்தி அடையும்
மகரம்
குரு பெயர்ச்சி மிகவும் 2025 மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். தொழில், வணிகம் மற்றும் வேலையில் நல்ல மகத்தான நன்மைகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கத்தின் மூலம் சிதைந்த உறவுகள் சரிசெய்யப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயம் ஆகும். போதுமான பணமும் மன அமைதியும் இருக்கும்.
