• Di.. März 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

März 23, 2025

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (23.03.2025)

குறித்த விடயத்தை சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கோட தெரிவித்துள்ளார்.

அதன்படி, அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டு பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

புதிய கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது ஏற்பட்ட சட்டச் சிக்கல் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பல வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிக்க அனுமதிக்கப்படவில்லை.

அந்த தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நிதியமைச்சர் என்ற வகையில் அண்மையில் விசேட வர்த்தமானியை வெளியிட்டார்.

சுமார் 3 கப்பல்கள் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 500 வாகனங்கள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed