• Di.. März 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தைக்கு நேர்ந்த கதி

März 23, 2025

யாழில்   டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரஞ்சித் என்ற ஒரு வயது ஒன்பது மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம்

குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

வீட்டில் வெள்ளி வைத்தால் செல்வம் பெருகும் ; சொல்லும் ஜோதிடம்

இதன்பின், டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தியுள்ளது

தேனீர்-கோப்பி குடிப்பவர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

இந்தநிலையில், குழந்தை மயக்கமுற்றதையடுத்து பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று (22) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed