மேஷம்
இன்று சிக்கனமாக செலவழிக்கவும். வியாபாரிகளுக்கு, உணவு சம்பந்தப்பட தொழில் செய்பவர்கள் சிறப்பான லாபம் அடையலாம். உங்களின் குழந்தைகள் பெயரில் தொழில் ஆரம்பித்தால் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6
ரிஷபம்
இன்று தடைபட்டிருந்த கல்வியைத் தொடருவீர்கள். கலைஞர்களுக்கு, விளம்பரத்துறை, திரைத்துறை டெக்னிக்கல் மற்றும் சின்னத்திறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7
மிதுனம்
இன்று சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6
கடகம்
இன்று உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரும். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
சிம்மம்
இன்று உங்கள் பிரச்சனைகளை நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே சொல்லவும். சில வேளைகளில் மற்றவர்களிடம் சொல்வதே பிரச்சனைகள் ஆகலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த ஒரு பொருட்களையும் வாங்க வேண்டாம். பிரிந்த நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் ஒன்று சேர்வர். கடுமையான உழைப்பிற்கு ஏற்ற பலன்களை தற்போது அறுவடை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9
கன்னி
இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அமைதிக்கு குறைவு இருக்காது. சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். மகான்களின் ஆசியும், ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். உங்கள் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். பயணம் செய்யும் போது உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
துலாம்
இன்று விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். உங்களிடம் இருந்து பிரிந்த சொந்தங்கள் திரும்பி சேர்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3
விருச்சிகம்
இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
தனுசு
இன்று எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
மகரம்
இன்று சகஊழியர்கள் உங்களிடம் ஒத்துழைக்காமல் தன்னிசையாக செயல்படலாம். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம், அதனால் தண்டனையும் கிடைக்கப் பெறலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5
கும்பம்
இன்று வீணான பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள். பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். ஏனெனில் சில பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9
மீனம்
இன்று உங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூடுதல் அன்பு செலுத்தவும். கடன் வாங்கியிருந்தால் சரியான முறையில் திருப்பிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யவும். உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3
- பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான தகவல் !
- இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்
- யாழ் உணவகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
- கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை
- செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.